அதானி பங்குகள் சரிவு! பணக்காரர்கள் பட்டியலில் 4-வது இடம்.!

உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து கௌதம் அதானி, நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளார்.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையின் எதிரொலியாக கௌதம் அதானி, உலக பணக்காரர்கள் பட்டியலிலிருந்து சரிந்துள்ளார். பங்குகளை கையாளுதல் மற்றும் அக்கவுண்ட்ஸ் மோசடியில் பங்கேற்றதாக அதானி குழுமம் தொடர்பாக, ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டிருந்தது.

adani slips 4

இந்த அறிக்கையின்படி, அதானி குழுமத்தின் நிறுவனரும்,  தலைவருமான கௌதம் அதானி, குழுமத்தின் 7 முக்கிய நிறுவனங்களின் பங்கு விலை, அதிகரிப்பு மற்றும், அவரது நிகர மதிப்பு சுமார் $120 பில்லியன் வரை உயர்ந்தது. மேலும் இந்த நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளில் சராசரியாக 819% சதவீதம் அதிக லாபம் அடைந்துள்ளதாக தெரிவித்திருந்தது.

இது குறித்து அதானி குழுமம் கூறும்போது, அதானி  எண்டர்பிரைசஸ் எஃப்பிஓ(FPO) வை சேதப்படுத்தும் நோக்கில் ஹிண்டன்பர்க் இந்த அறிக்கையை வெளியிட்டதாக கூறியது. தவறான தகவல் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் குழுமத்தின் நற்பெயரை பாதிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது இது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது என்று அதானி குழும சிஎஃப்ஓ ஜுகேஷிந்தர் சிங் மேலும் கூறினார்.

jeff 3rd

ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையின் மூலம், அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் ரூ. 80,000 கோடிக்கு மேல் இழந்து, 119 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த அதானி, நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் 120 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துமதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment