சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் நடிகை தீபிகா படுகோண்..?

தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோண் நடிக்கவுள்ளதாக தகவல்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்க்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடித்துள்ள நிலையில், வருகின்ற நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி அன்று படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தலைவர் 169-படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசுங்கு பெரிய சாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும், படத்தை  சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் தலைவர் 169 குறித்த அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நடிகை தீபிகா படுகோணிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கேஎஸ் ரவி குமார் இயக்கத்தில் உருவாகவிருந்த ராணா திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோண் நடித்து வந்தார். அதன் பிறகு ரஜினிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன காரணத்தால் படம் அப்படியே கைவிடப்பட்டது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.