மீண்டும் பழைய பார்முலாவை கையில் எடுத்த நடிகை அனுஷ்கா! தரமான கம்பேக் லோடிங்…

நடிகை அனுஷ்கா சினிமா துறையில் நுழைந்த குறுகிய காலத்திலே மக்களுக்கு மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் அனுஷ்கா.  இவர் தமிழ் சினிமாவில் அஜித், ரஜினி, விஜய், என பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக  ஒரு காலத்தில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர். பிறகு உடல் எடை அதிகரித்த காரணத்தினால் இவருக்கு  பட வாய்ப்புகள் குறைய தொடங்கி விட்டது என்று சொல்ல வேண்டும்.

பாகுபலி படத்திற்கு  பெரிய அளவில் பெயர் சொல்லும் அளவிற்கு படங்களில் நடிக்க அனுஷ்காவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனாலே தனது உடல் எடையை மீண்டும் குறைத்து பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்று நடிகை அனுஷ்கா முடிவெடுத்துள்ளார். இது ஒரு புறம் இருக்க அனுஷ்கா தற்போது தனது பழைய பார்முலாவை கையில் எடுத்துள்ளார்.

அட்ஜஸ்ட்மென்ட் பற்றி ஓவியா! உண்மையை வெளிச்சம் போட்டு காட்டிய பயில்வான் ரங்கநாதன்?

அது என்னவென்றால் நடிகை அனுஷ்கா ஆரம்ப காலத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். தற்போதும் அந்த பார்முலாவை தற்போது மீண்டும் எடுத்துள்ளாராம். அதன்படி, ஜாகர்லமுடி ராதாகி ருஷ்ணா என்பவருடைய இயக்கத்தில் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் தற்போது அனுஷ்கா நடித்து வருகிறார்.

பத்து வருடங்களுக்கு முன்பு ஒடிசாவில் பெண் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அனுஷ்கா தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடும் சாதாரண பெண்ணாக நடித்து வருகிறாராம். சமீபத்தில் ஒடிசாவில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியும் இருந்தது.

இதற்கிடையில் இந்த படத்திற்கு ‘சீலாவதி’ என டைட்டில் வைக்க படக்குழு முடிவு செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு காம்பேக் கொடுக்கவேண்டும் என்ற நோக்கில் தனது பழைய பார்முலாவை அனுஷ்கா கையில் எடுத்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment