ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளித்த நடிகர் அஜித்தின் தக்ஷா குழு.. கர்நாடக துணை முதல்வர் பாராட்டு.!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பதாக அஜித் தலைமையில் சென்னை அண்ணா பல்கலைகழகத்தை சேர்ந்த தக்‌ஷா குழுவினர் முடிவெடுத்தனர்.

மேலும், தக்‌ஷா குழுவினர் உருவாக்கிய ட்ரோன்கள் ஏற்கனவே இந்திய அளவில் பல்வேறு போட்டிகளில் முதல் இடம் பெற்று, பல பரிசுகளை பெற்றது. அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியாவிலும் பரிசு வென்றது.

அஜித் தலைமையிலான தக்‌ஷா குழுவினர் உருவாக்கிய இந்த ட்ரோன்கள், 30 நிமிடத்தில் சுமார் 16 லிட்டர் கிருமி நாசினியை தெளித்து விடும் திறன் கொண்டவை என நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் உருவாக்கிய இந்த டிரோன்களுக்கு கர்நாடக மாநில துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்ட பதிவில், நடிகர் அஜித்தின் அறிவுறுத்தலின்படி ட்ரோன்கள் மூலம் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பதில் ‘தக்‌ஷா’ குழு சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார்.