34.4 C
Chennai
Friday, June 2, 2023

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஓர் எச்சரிக்கை… கழிப்பறையை விட 10 மடங்கு ஆபத்து உங்கள் கைகளில்…!

கழிப்பறைகளை விட மொபைல் போன்களில் அதிக பாக்டீரியாக்கள் உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மொபைல் போன்கள்

இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது என்று கூறலாம். சிறிய  வயது முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மொபைல் ஃபோன்களை அதிக நேரம் உபயோகப்படுத்தி வருகிறார்கள்.  காலை, மாலை, இரவு என இடைவெளியே இல்லாமல் நேரம் பார்க்காமல் முழுக்க முழுக்க மொபைல் ஃபோன்களை உபயோகித்து வருகிறார்கள்.

Mobile Phone use
Mobile Phone use [Image Source : Medium ]

அத்தகைய மொபைல் ஃபோன்களை பயன்படுத்துவதற்கு நன்றாக இருந்தாலும், அதில் கிட்டத்தட்ட  கழிப்பறை இருக்கையை விட 10 மடங்கு அதிகமாக பாக்டீரியாக்கள் இருப்பதாக  ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்

அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் பருவவயதினர்கள் உபயோகம் செய்யும் போனில் குறைந்தது 17,000 பாக்டீரியாக்கள் இருப்பதாகவும், இது சாதாரண கழிப்பறை இருக்கையை விட 10 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மருத்துவர் விளக்கம்

டிக்டாக் செயலி மூலம் பிரபலமான தோல் மருத்துவர் ‘பொது கழிப்பறைகளை’ விட அதிக பாக்டீரியாக்கள் இருப்பதால், நமது மொபைல் போன்கள் நமது சருமத்திற்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கும் என்பதை பற்றி விளக்கமாக பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” மொபைல் போன்கள் எல்லா நேரத்திலும் பாக்டீரியாவால் மூடப்பட்டிருக்கும், பொது கழிப்பறையை விட நமது போன்களில் அதிக பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

எனவே, தினசரி தொலைபேசியை பயன்படுத்துதல் மற்றும் பேசும் போது அதை முகத்தில் வைப்பது, பாக்டீரியாவை சருமத்திற்குள் செல்ல வழி வகுக்கும். இதனால்  சில தோல் பிரச்சனைகள் ஏற்படலாம்.  ஃபோனை தொடர்ந்து சுத்தம் செய்து ஈரமான துடைப்பான்கள் அல்லது சோப்பு நீரில் நனைத்த துணியால் துடைக்க வேண்டும். அல்லது அதில் சிக்கியுள்ள பாக்டீரியாக்களை அகற்ற 70% க்கும் அதிகமான செறிவு கொண்ட ஆல்கஹால் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

எப்படி சுத்தம் செய்ய வேண்டும்..? 

இந்த பாக்டீரியாக்கள் தடுக்க வேண்டும் என்றால், நிபுணர்களின் கூற்றுப்படி, 60% தண்ணீர் மற்றும் 40% தேய்க்கும் ஆல்கஹால் கரைசலைப் பயன்படுத்தி ஒரு மாதத்திற்கு பல முறை நம் போனை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இது மிகவும் நல்லது.

Mobile Phone use clean
Mobile Phone use clean [Image Source : CNET ]

மேலும், தொலைபேசியில் நேரடியாக திரவத்தை தெளிப்பதைத் தவிர்க்கவும், ஏனென்றால், அது  போனின் காட்சியைக் கெடுக்கும். இதை தவிர கிருமிநாசினிகளையும் பயன்படுத்தி  உங்களுடைய போன்களை சுத்தம் செய்து கொள்ளலாம்.