ரோல்ஸ் ராய்ஸ் கார் கிறிஸ்மஸ் பரிசு! திகைத்து போன ரொனால்டோ.!

ரொனால்டோவிற்கு, ரோல்ஸ் ராய்ஸ் காரை கிறிஸ்மஸ் பரிசளித்த அவரது மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ், இன்ஸ்டாவில் பகிர்ந்த வீடியோ.

கால்பந்து ரசிகர்களின் மிகவும் விருப்பமான வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இந்த வருடம் சரியாக அமையவில்லை என்றே சொல்லலாம். மான்செஸ்டர் கிளப் அணியுடனான விலகல், மேலும் உலகக்கோப்பை தொடரிலும் போர்ச்சுகல் அணியில் முக்கிய போட்டிகளில் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டார்.

அவருக்கு இதுதான் கடைசி உலகக்கோப்பை தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இன்னும் உறுதியான எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் அவரது சொந்த வாழ்க்கையில் அன்பான மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடினார்.

ரொனால்டோவின் மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ், அவருக்கு ‘ரோல்ஸ் ராய்ஸ் பான்டம்’ காரை கிறிஸ்மஸ் பரிசாக அளித்துள்ளார். இந்திய மதிப்பில் இந்த ‘ரோல்ஸ் ராய்ஸ் பான்டம்’ கார் ரூ.2.50 கோடி மதிப்பு என்று கூறப்படுகிறது.

ரொனால்டோ இந்த பரிசைப்பார்த்தவுடன் அன்பில் திகைத்து நின்றார். நன்றி! என் அன்பான மனைவி என்று ரொனால்டோ அதற்கு பதிலளித்துள்ளார். இந்த விடியோவை ஜார்ஜினா, தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Georgina Rodríguez (@georginagio)

author avatar
Muthu Kumar

Leave a Comment