UP Hathras Stampede - Allahabad High Court

121 பேரை பலி.! ஹத்ராஸ் கூட்ட நெரிசல் வழக்கு., சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு.!

By

உ.பி: ஹத்ராஸ் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வில் நேர்ந்த கூட்ட நெரிசல் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அலகாபாத உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நேற்று ஆன்மீக சொற்பொழிவாளர் போலே பாபா தலைமையில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு முடிந்து அனைவரும் அங்கிருந்து ஒரே நேரத்தில் புறப்படுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது .

இதுவரை 121 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 28 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதில் 6 பேர் அலிகாரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியிலும், அலிகரில் உள்ள தீன் தயாள் மருத்துவமனையில் 6 பேரும்,  ஹத்ராஸில் உள்ள பாக்லா மருத்துவமனையில் 9 பேரும்,  ஒருவர் ஆக்ரா எஸ்என் மருத்துவக் கல்லூரியிலும், 6 பேர் ஹத்ராஸில் உள்ள எட்டா மருத்துவக் கல்லூரியிலும் சிகிச்சை பெற்று வருவதாக தக்வல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்த கூட்ட நெரிசல் கோர விபத்து குறித்து மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கவுரவ் திவேதி என்பவர் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் குறித்து மாநில அரசு சார்பில் விசாரணை நடத்த உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முன்னதாக உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்துள்ளார். அதே போல பிரதமர் மோடியும் , இந்த கோர நிகழ்வுக்கு தனது இரங்களை தெரிவித்து , பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Dinasuvadu Media @2023