விவகாரத்தை கொண்டாட விபரீத முயற்சி… எலும்புகள் உடைந்து தீவிர சிகிச்சையில் 22 வயது இளைஞர்.!

விவாகரத்தை கொண்டாடுவதற்காக பங்கி ஜம்ப் சென்ற ஒருவரின் கயிறு அறுந்து 70 அடி கீழே விழுந்ததில் படு காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பிரேசிலின் காம்போ மாக்ரோவில் உள்ள லகோவா அசுலுக்கு தன்னுடைய விவகாரத்தை கொண்டாடுவதற்காக ரஃபேல் டோஸ் சாண்டோஸ் டோஸ் எனும் 22 வயது இளைஞர் பங்கி ஜம்ப்-பில் பங்கேற்கச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து விழுந்ததில் 70 அடி ஆழத்தில் விழுந்தார்.

Rafael dos Santos Tosta
Rafael dos Santos Tosta Image source CEN

இதில் அவரது கழுத்து மற்றும் இடுப்பு முதுகெலும்பு முறிந்து மருத்துவமனையில் தீவிர சிக்கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய ரஃபேல் “நான் எப்போதும் மிகவும் அமைதியான நபராக இருந்தேன், ஆனால் சமீபகாலமாக நிலைமை மாறிவிட்டது. விவாகரத்துக்குப் பிறகு, நான் எல்லா வகையிலும் வாழ்க்கையை அனுபவிக்க விரும்பினேன்.

bungee jump
bungee jump Image source CEN

நான் நிறைய பைத்தியக்காரத்தனமான விஷயங்களைச் செய்து கொண்டிருந்தேன். நான் என் உயிரை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அன்று, நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருந்தேன். நான் பங்கி ஜம்ப் செய்யும் பொது  கயிறு எனது எடையைத் தாங்க முடியாமல் அறுந்தது.  இதனால் நான் மிகவும் பீதியடைந்தேன்,  கீழே விழுது  எழுந்து நிற்க முயற்சித்தபோது, நான் மிகவும் வலுவான வலியை உணர்ந்தேன்.

man bungee jump
man bungee jump source Image source CEN

என் வாழ்க்கையில் இதைவிட மோசமான வலியை நான் உணர்ந்ததில்லை” என கூறி உள்ளார். மேலும், அவர் பங்கி ஜம்ப்  செய்யும் போது கீழே தவறி விழுந்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.