அரபிக் கடலில் உருவாகிறதுகுறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை!

இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக வரும் ஜனவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இதற்கிடையில், 30மற்றும் 31 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜனவரி 1 (2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை மையயம் அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.