இப்போ நாங்கள் இருக்கும் சூழலுக்கு 2 .5லட்சம் அபராதம் ரொம்ப பெரியத்தொகை…ரோபோ சங்கர் மனைவி வேதனை.!

நடிகர் ரோபோ சங்கர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் 2 கிளிகள் வளர்ந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி கிண்டி வனத்துறையினர் அதிரடியாக அந்த 2 கிளைகளையும் பறிமுதல் செய்தனர்.  ரோபோ சங்கர் கிளிகளை வளர்க்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி அனுமதி வாங்காமல் கிளிகளை வளர்ந்து வந்ததால் கிண்டி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து அந்த இரண்டு கிளிகளையும் பறிமுதல் செய்தனர்.

robo shankar
robo shankar Image Source Google

பறிமுதல் செய்த அந்த இரண்டு கிளிகளையும் வனத்துறையினர்கிண்டியில் உள்ள நேசனல் சிறுவர் பூங்காவில் ஒப்படைந்திருந்தார்கள். இதனையடுத்து உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்ததன் காரணமாக வனத்துறை சார்பில் நேற்று ரோபோ ஷங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Robo Shankar
Robo Shankar Image Source Google

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் என்பது ரொம்ப பெரியத்தொகை என வருத்தத்துடன் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நாங்கள் இப்போது இருக்கும் சூழ்நிலையில், கிளிகள் வளர்த்ததற்காக 2.5 லட்சம் ரூபாய் அபராதம் என்பது ரொம்பவே பெரியத்தொகை. இந்தத் தொகையை கட்டுவது எங்களுக்கு கஷ்டம்தான். ஆனாலும், அரசு விதிமுறைகளை கடைப்பிடிப்போம்.

robo shankar priyanka
robo shankar priyanka Image Source Google

எங்களுடைய வீட்டில் நாங்கள் யாரும் இல்லாத நேரத்தில் தான் அந்த 2 கிளிகளை பறிமுதல் செய்துகொண்டு சென்றார்கள். மீண்டும், தற்போது, ஊரிலிருந்து வந்துவிட்டோம். இன்னும் வனத்துறை அதிகாரிகளை நேரில் பார்க்கவில்லை. என்னுடைய கணவர் படப்பிடிப்பில் இருக்கிறார் இதனால் அதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டு இருக்கிறார். காசு கொடுத்து இந்த கிளிகளை வாங்கவில்லை பரிசாக தான் வந்தது” என கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment