1 மில்லியன் டாலர் மதிப்புள்ள கார்.. சூறாவளியால் அடித்து செல்லப்பட்ட பரிதாபம்..

சூறாவளியால் 1மில்லியன் டாலர் மதிப்புள்ள மெக்லாரன் கார் அடித்து செல்லப்பட்ட பரிதாபம்.

புளோரிடாவில் நேற்று(செப் 29) 10 மடங்கு வேகத்தில் வீசிய சூறாவளியால் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள, ஸ்போர்ட்ஸ் மெக்லாரன் கார் கேரேஜிலிருந்து அடித்து செல்லப்பட்டு, நீரில் மூழ்கியது.

217mph வேகத்தில் செல்லக்கூடிய இந்த மெக்லாரன் பி1 காரானது 2.2வினாடிகளில் கிட்டதட்ட 0 முதல் 60mph வரை செல்லக்கூடியது. இந்த காரின் உரிமையாளர் அதனை ஒரு வாரத்திற்கு முன்பு தான் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த ஸ்போர்ட்ஸ் காரின் உரிமையாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவரது மெக்லாரன் காரானது தண்ணீரில் மூழ்கியிருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Rich Kids of London (@richkidslondon)

author avatar
Varathalakshmi

Leave a Comment