19 வயது இளைஞனை 100 மீட்டர் வரை இழுத்துச் சென்ற எஸ்யூவி கார்.. வைரலாகும் வீடியோ!

டெல்லியில் ஃபார்ச்சூனர் கார் ஒன்று சாலையில் நின்றுகொண்டிருந்த பல வாகனங்கள் மீது கட்டுப்பாடின்றி மோதி, 19 வயது இளைஞன் ஒருவனை 100 மீட்டர் வரை இழுத்துச் சென்றது.

திங்கள்கிழமை(செப் 10) மாலை டெல்லியின் கரோல் பாக் பகுதியில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் கட்டுப்பாடின்றி மீது மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 19 வயது இளைஞரை 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது.

இச்சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு அங்குள்ள சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த எஸ்யூவி கார் டிரைவர் பிடிபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கார் டிரைவர் விபத்தின் போது மது போதையில் இருந்தாரா என்பதை கண்டுபிடிப்பதற்காக, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
Varathalakshmi

Leave a Comment