நடுரோட்டில் காதலிக்கு ‘பளார்’ விட்ட காதலன்! அதிர்ந்து போன அக்கம் பக்கத்தினர்..வைரலாகும் வீடியோ!

உபி : அன்றாடம் சமூக வலைத்தளங்களில் எதாவது வீடியோக்கள் வைரலாவது என்பது வழக்கமான ஒன்று. அப்படி தான் தற்போது பெண்ணை ஒருவரை நடுரோட்டில் கன்னத்தில் பளார் என அறையும் வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் பெண்ணை அடித்த அந்த நபரை திட்டி தீர்த்து வருகிறார்கள்.
வீடியோவில்” ஆண் ஒருவர் கையில் ஒரு போன் ஒன்றை வைத்து கொண்டு பெண்ணை நோக்கி வருகிறார். வந்து இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது கோபத்துடன் அந்த ஆண் பெண்ணிடம் போனை கொடுத்தார். அதனை வாங்கிய போது ஆத்திரத்தில் இருந்த ஆண் கையை வைத்து பளார் என பெண்ணின் கன்னத்தில் அறைந்தார்.
அறைந்தவுடன் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சற்று நிலை தடுமாறினார். நடுரோட்டில் பெண்ணை அடித்தவுடன் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஒன்றுமே கேட்காமல் அப்படியே வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தார்கள். மற்றோருவர் தனது போனில் வீடியோ எடுத்து கொண்டு இருந்தார். கன்னத்தில் அறைந்த அந்த ஆண் பெண்ணை முறைத்து பார்த்தபடியே சென்றார்.
இருவரும் காதலர்கள் எனவும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த பெண்ணை ஆண் அடித்ததாக தெரிகிறது. இருப்பினும், வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், கண்டிப்பாக நடு ரோட்டில் பெண்ணிடம் வன்முறையில் ஈடுபட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், கோபமாக இருந்தால் இப்படியா நடுரோட்டில் வைத்து ஒரு பெண்ணை அடிப்பீர்கள்? எனவும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024