Yoga Day 2024

தனுஷ்கோடியில் கடற்படை.. மலை உச்சியில் இந்திய ராணுவம்.! யோகா தின சிறப்பு விடியோ…

By

சர்வதேச யோகா தினம் : 10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இந்திய ராணுவ வீரர்கள் மலைகளிலும் மற்றும் இந்திய கடற்படை வீரர்கள் போர்க்கப்பலில் யோகாசனம் செய்தன.

கடந்த 2014ஆம் ஆண்டில் சர்வதேச யோகா தினத்தை பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள் சபையில் முன்மொழிந்தார். அதை, 177 உலகநாடுகள் ஆதரித்த நிலையில், உலகம் முழுவதும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று 10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீரின்  ஸ்ரீநகரில் உள்ள மாநாட்டு மையத்தில் பிரதமர் மோடி யோகாசனம் செய்ததோடு, நாட்டு மக்களுக்கும், உலகெங்கும் யோகா செய்பவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

இந்நிலையில், இன்று இந்திய ராணுவ வீரர்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள பீர் பாஞ்சால் மலைத்தொடர்களில் யோகாசனம் செய்தனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், வீரர்கள் தங்கள் சீருடைகளை முழுமையாக மூடிக்கொண்டு, பனி மூட்டத்தையும் பொருட்படுத்தாமல் 10-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பல்வேறு யோகானங்களை செய்தனர். மேலும், உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் யோகா செய்தார்.

இதனிடையே, தனுஷ்கோடியில் இந்திய கடற்படை வீரர்கள் ஐஎன்எஸ் தர்காஷ் மற்றும் ஐஎன்எஸ் டெக் போன்ற போர்க்கப்பல்களில் சூரிய நமஸ்கர் உட்பட பல்வேறு யோகா ஆசனங்களைச் செய்தனர்.

 

10வது சர்வதேச யோகா தினத்தை குறிக்கும் வகையில், இந்தியாவின் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவின் மாலுமிகள் இன்று அதிகாலை நடைபெற்ற அந்த யோகாசனத்தில் சில குழந்தைகளும் பங்கேற்றனர்.

Dinasuvadu Media @2023