,

ரெடியா? பிக் பாஸ் சீசன் 8 எப்போது? வந்தாச்சு லேட்டட்ஸ் அப்டேட்!!

By

பிக் பாஸ் சீசன் 8 : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள். நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவங்கள் எல்லாம் சுவாரசியமாக இருக்கும் காரணத்தால் இந்த நிகழ்ச்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி பார்ப்பது உண்டு. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 7 சீசன் முடிந்து இருக்கிறது.

கடைசியாக நடைபெற்ற 7 -வது சீசன் நிகழ்ச்சியில் விஜே அர்ச்சனா டைட்டிலை தட்டிச்சென்றார். இந்நிலையில், 7-வது சீசன் வெற்றிகரமாக முடிந்து இருக்கும் நிலையில், அடுத்ததாக 8-வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து இருந்தார்கள். இதனையடுத்து, 8-வது சீசன் எப்போது தொடங்கும் என்பதற்கான தகவல் கசிந்து இருக்கிறது.

அதன்படி, பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதமே தொடங்கலாம்  என தகவல்கள் கிடைத்துள்ளது. தற்போது அதற்கான பேச்சுவார்த்தை தான் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரபலங்கள் யாரெல்லாம் தேர்வு செய்யலாம் என்பதற்கான வேலைகளும் மும்மரமாக போய்க்கொண்டு இருக்கிறதாம்.

அதைப்போல, வழக்கத்தை விட இந்த முறை பிரபல நடிகர் ஒருவரும் பிரபல நடிகை ஒருவரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வழக்கம் போலவே, இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். விரைவில் பிக்பாஸ் சீசன் 8 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Dinasuvadu Media @2023