வெளிநாடுகளிலும் இனி UPI பயன்படுத்தி பணம் செலுத்தலாம்- PhonePe.!

போன்பே (PhonePe) நிறுவனம், பயனர்கள் தற்போது மற்ற நாடுகளில் UPI ஐப் பயன்படுத்தி பணம் செலுத்தும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பேமெண்ட் தளங்களில் ஒன்றான PhonePe, தனது பயனர்களை UPI மூலம் சர்வதேச கட்டணங்களைச் செய்ய அனுமதிக்கும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. நீங்கள் வேறொரு நாட்டிற்குச் சென்று வெளிநாட்டு வணிகர்களுக்கு பணம் செலுத்த விரும்பினால் இது மிகவும் எளிதானது என்று கூறியுள்ளது.

சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), மொரீஷியஸ், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள எந்தவொரு சர்வதேச வணிகர்களுக்கும் உள்ளூர் QR குறியீட்டைக் கொண்டு UPI பணம் செலுத்தலாம் என PhonePe தெரிவித்துள்ளது.

NIPL (NPCI இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட்) உடன் இணைந்து இது  உருவாக்கப்பட்டுள்ளது, நிறுவனம் எதிர்காலத்தில் மேலும் பல நாடுகளில் ‘UPI இன்டர்நேஷனல்’ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியது. கடந்த ஆறு ஆண்டுகளில், இந்தியா முழுவதும், UPI பேமெண்ட்களில் PhonePe நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது.

UPI இன்டர்நேஷனல் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் வெளிநாடுகளில் உள்ள வணிகர் கடைகளில் பணம் செலுத்தும் முறையை முற்றிலும் இது மாற்றியமைக்கும் என்று நான் நம்புகிறேன். PhonePe இந்த மாற்றத்தை முன்னெடுப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். முழு உலகமும் UPIயை அனுபவிக்க வேண்டும் என PhonePe இன் இணை நிறுவனர் ராகுல் சாரி கூறினார்.

PhonePe பயனர்கள் UPI இன்டர்நேஷனலுக்கான தங்கள் UPI இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கை அவர்களின் பயணத்திற்கு முன் ஆப்ஸ் மூலமாகவும்  செயல்படுத்தலாம் எனவும் இந்த சேவை மிகவும் பாதுகாப்பானது என்று PhonePe மேலும் கூறியது. இந்திய வங்கிகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தப்படும் மற்றும் பெறுநருக்கு அவர்களின் உள்ளூர் மதிப்பில் பணம் கிடைக்கும். இதன் மூலம் இனி சர்வதேச கிரெடிட், டெபிட் மற்றும் ஃபாரெக்ஸ் கார்டுகளின் தேவை இருக்காது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் கிடைக்கும் இந்த புதிய அம்சத்தை ஆப்ஸ் மூலம் செயல்படுத்தலாம் என்று PhonePe தெரிவித்துள்ளது.

author avatar
Muthu Kumar

Leave a Comment