வேணுமா.? வேணாமா.? டிரம்பிற்காக கருத்துக்கணிப்பை தொடங்கிய டிவிட்டர் ஓனர் எலான் மஸ்க்.!

எலான் மஸ்க், டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கை மீண்டும் தொடங்குவது குறித்து ட்விட்டர் கருத்துக்கணிப்பைக் கேட்டுள்ளார்.

எலான் மஸ்க், டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கை மீண்டும் தொடங்குவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் விதமாக, ட்விட்டரில் கருத்துக்கணிப்பைக் கேட்டுள்ளார், மக்களின் குரல் கடவுளின் குரல் என்பதால் உங்களிடம் கருத்து கேட்கிறேன் என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு அமெரிக்க தலைநகர் மீதான தாக்குதலுக்குப் பிறகு, வன்முறையைத் தூண்டும் ஆபத்து காரணமாக ட்ரம்ப் 2021 இல் ட்விட்டரில் இருந்து நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து கடந்த மே மாதம், உலகின் மிகப்பெரிய பணக்காரரும் ட்விட்டரின் புதிய உரிமையாளருமான எலான் மஸ்க், டொனால்ட் டிரம்ப் மீதான ட்விட்டரின் தடையை மாற்றியமைப்பதாக கூறியிருந்தார்.

இருப்பினும், தற்போது வரை டிரம்பின் கணக்கை திரும்பப் பெறுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று மஸ்க் கூறினார். ஆனால் அது குறித்து ட்விட்டரில், இன்று சனிக்கிழமை காலை ட்விட்டர் வாக்கெடுப்பைத் தொடங்கினார்.

வாக்கெடுப்பிற்கு இன்னும் 21 மணிநேரம் உள்ள நிலையில் ஏற்கனவே 3,863,478க்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன, பதிலளித்த 56% சதவீதத்திற்கும் அதிகமானோர் டிரம்ப்பிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

RELATED ARTICLES