இதயத்தை கண்காணிக்க ஸ்மார்ட் சட்டையை உருவாக்கிய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்..!

இதயத்தை கண்காணிக்க அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ‘ஸ்மார்ட் சட்டை’ உருவாக்கியுள்ளனர். 

உடல் நலத்தில் அக்கறை உள்ளவர்கள்  மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் இப்போது ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் பயன்படுத்துவதை விரும்புகின்றனர்.  அமெரிக்காவின் டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள ரைஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு நானோகுழாய் நூலை உருவாக்கி, அதை வழக்கமான ஆடைகளாக நெசவு செய்து ஸ்மார்ட் ஆடைகளாக மாற்றி ஸ்மார்ட் சட்டை உருவாக்கியுள்ளனர்.

இழைகள் உலோகக் கம்பிகளைப் போலவே கடத்தும் தன்மை கொண்டவை, ஆனால் ஒரு உடல் இயக்கத்தில் இருக்கும்போது கழுவக்கூடிய வாய்ப்பு மிகக் குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நேரடி சோதனைகளின் போது கிடைக்கும் அளவீடுகளை எடுக்கும் நிலையான மார்பு-பட்டா மானிட்டரை விட இந்த சட்டை தரவுகளை சேகரிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. இழைகளை நிலையான நூலைப் போலவே துணிக்குள் தைக்கலாம். ஜிக்ஜாக் தையல் முறை இதனை உடைக்காமல் இருக்க உதவுகிறது.

இது குறித்து தெரிவித்துள்ள முன்னணி எழுத்தாளர் ரைஸ் பட்டதாரி மாணவர் லாரன் டெய்லர், “சட்டை மார்புக்கு எதிராக இறுக்கமாக இருக்க வேண்டும்”,  “எதிர்கால ஆய்வுகளில், கார்பன் நானோகுழாய் நூல்களின் அடர்த்தியான இணைப்புகளைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவோம், அதனால் உடலில் உள்ள தோலைத் தொடர்புகொள்வதற்கு அதிக வாய்ய்பு உள்ளது.” இவ்வாறு கூறியுள்ளார்.

இழைகள் இந்த சட்டையை அணிந்தவரின் தோலுடன் நிலையான மின் தொடர்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், புளூடூத் டிரான்ஸ்மிட்டர்கள் போன்ற எலக்ட்ரானிக்ஸ் டேட்டாவை ஸ்மார்ட்போனில் தொடர்பு படுத்தவும் பயனுள்ளது என்று டெய்லர் கூறினார். மேலும் இதில் ஹெல்த் மானிட்டர்கள் மற்றும் இராணுவ சீருடையில் பாலிஸ்டிக் பாதுகாப்பு போன்ற மனித-இயந்திர இடைமுகங்கள் உள்ளது என்று டெய்லர் குறிப்பிட்டார்.