ஆஸ்திரேலியாவில் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு..!

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த கொரோனா தொற்று பரவல் உலக நாடுகளை பெரியளவில் பாதித்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கையும் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மேலும் கொரோனா வைரஸ் பல வகைகளில் உருமாறி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி உலக நாடுகளில் வேகமாக நடைபெற்று வருகிறது. கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில் சீன கட்டுப்படுத்திவிட்டதாக அறிவித்தது.
மேலும், ஆஸ்திரேலியாவும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால்  கொரோனா வைராசை கட்டுப்படுத்தியது. தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் ஆஸ்திரேலியாவில்  வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த சமயத்தில் சிட்னி நகரில் கொரோனா தொற்று வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. மேலும், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இன்று 262 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கொரோனாவால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து கூறிய இம்மாநிலத்தின் பிரிமியர் கிளாடிஸ் பெரெஜிக்கிலியன், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது உலக நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்துவருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசியே முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணத்தால் அங்குள்ள நியூ காசில் மற்றும்  ஹண்டர் பல்லஹாக்கு பகுதிகளில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.