இன்று வெளியாகும் ‘லாபம்’ பட பர்ஸ்ட் சிங்கிள்.!

லாபம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘யாழா யாழா’ பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் .அதில் ஒன்று லாபம் . ஜனநாதன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தினை விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பானது சமீபத்தில் தொடங்கி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.விரைவில் ரிலீஸாக இருக்கும் லாபம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘யாழா யாழா’ பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.யுகபாரதி வரிகள் எழுதியுள்ள இந்த பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.