காது கேளாத குழந்தைகளுக்கு சைகை மொழியில் பாடப்புத்தகங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்.!

காது கேளாத குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் பிற கல்விப் பொருட்களை வழங்குவதற்காக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

இதனை, மத்திய சமூக நீதி அமைச்சர் கெஹ்லோட் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஆகியோரின் டிஜிட்டல் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், இது குறித்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவர் சந்த் கெஹ்லோட் கூறுகையில், இந்திய சைகை மொழியில் என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்கள் கிடைப்பதால் காது கேளாத குழந்தைகளுக்கு கல்வி வளங்களை இப்போது அணுக முடியும். இது ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் காது கேளாதோர் சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.