மனைவிமார்கள் கணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

திருமணம் எனும் பந்தத்தில் இணைந்து சொந்தமாகும் ஆணும் பெண்ணும், திருமண நிகழ்விற்கு பின் காலம் முழுக்க சேர்ந்து வாழ இருக்கின்றனர். ஆகையால், அவர்கள் வாழவிருக்கும் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமைய ஆணும் பெண்ணும் சில விஷயங்களை அறிய வேண்டியது மிகவும் அவசியம்.

அந்த வகையில் மனைவிமார்கள் கணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 6 விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

மாமியார்

உங்கள் மாமியாருடன் என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அதை சுமூகமாக தீர்க்க முயலுங்கள்; அதை விடுத்து உங்கள் கணவரிடம் அவரது அன்னை குறித்து தொடர்ந்து புகார் அளித்து வந்தால், கணவருக்கு உங்கள் மீது தான் வெறுப்பு ஏற்படும்.

ஆகையால் மாமியார் மீது புகார் அளிப்பதை தவிர்த்து, அவரை உங்கள் அன்னையாக கருதி பழக முயலுங்கள் மருமகள்களே!

தெரியாதா?

கணவர் சில செயல்களை ஏதேனும் ஒரு சூழலில் தவறாக செய்தால், அப்பொழுது அதை சரியான முறையில் அவருக்கு உணர்த்துங்கள்; அதை விடுத்து இது கூட உங்களுக்கு தெரியாதா என்று இகழ்ந்து பேசினால், உறவில் சரியான சூழல் நிலவாது என்பதை மனதில் நிறுத்துங்கள் பெண்களே!

அம்மா வீடு

புகுந்தகத்தில் நேரும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு எல்லாம், நான் என் அம்மா வீட்டிற்கு செல்கிறேன் என்று அடம்பிடிக்காமல், நிலையை புரிந்து கொண்டு, அங்கு நிலைத்து, பிரச்சனையை சரிசெய்ய முயலுங்கள் பெண்களே!

புலம்பல்

அது சரியில்லை, அவர் அப்படி, இப்படி என்று சதா நேரமும் புலம்பிக் கொண்டு இருக்காமல், மற்றவர் பிரச்சனைகளை விடுத்து உங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள். எப்பொழுதும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை பற்றி பேச முயலுங்கள்!

ஒப்பிடுதல்

புகுந்த வீட்டையும் பிறந்த வீட்டையும் ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்க முயலுங்கள்; புகுந்த வீட்டின் நிலை சரியில்லை எனில், அதை பற்றி குறை கூறாமல், நீங்கள் புகுந்த வீட்டின் நிலையை உயர்த்த பாடுபடுங்கள்.

author avatar
Soundarya

Leave a Comment