தசராவில் 80 அடி ராவணன் சிலை சரிந்து விபத்து – 6 பேர் காயம்!

ஹரியானாவின் யமுனா நகரில் நடைபெற்ற தசராவின் முக்கிய நிகழ்வான ராவண வதத்தில், 80அடி ராவணன் சிலை கீழே விழுந்து 6பேர் காயம்.

நவராத்திரியின் 9ஆம் நாள் திருவிழாவில் ராமர், ராவணனை வதைக்கும் தசரா எனும் நிகழ்வு நடைபெறுவது இந்து முறையில் வழக்கம். கொரோனா தொற்று காரணமாக 2 வருடமாக நடைபெறாமல் இருந்த இந்த தசரா இந்த வருடம் நடைபெற்றது. நேற்று நவராத்திரியின் இறுதி நாள், ஹரியானா மாநிலம் யமுனா நகரில் தசரா விழா நடைபெற்றது, இதில் 80 அடி ராவணன் சிலைக்கு ராமர், தீ வைத்து அழிப்பது போன்று தசரா விழா நிறைவு பெறும். . அப்படி நடைபெற்ற அந்த விழாவின் இறுதியில் எறியப்பட்டுக்கொண்டிருந்த ராவணன் சிலை கீழே சாய்ந்தது. அங்கே கூடியிருந்தவர்களில் சில பேரின் மேல் அந்த சிலை விழுந்தது. மக்களில் 6 பேருக்கு  லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மக்கள் அங்குமிங்கும் கூச்சலிட்டுக்கொண்டே ஓடினர்.

போலீசார் வருவதற்கு முன் மைதானத்திலிருந்த பணியாளர்கள், மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் மக்களுக்கு பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

author avatar
Muthu Kumar

Leave a Comment