கலிபோர்னியா பூங்காவில் 8 கொரில்லாக்களுக்கு கொரோனா.!

அமெரிக்கா: கலிபோர்னியாவின் சான் டியாகோவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் உள்ள எட்டு கொரில்லாக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

இதற்கிடையில், ஒரு விலங்குக்கு கொரோனா பரிசோதித்த பின்னர், குரங்குகளுக்கு வைரஸ் பரவுவதை கண்டறியப்பட்டது என்று பூங்காவின் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

கடந்த புதன்கிழமை இரண்டு கொரில்லாக்களில் ஒன்றிலிருந்து சேகரிக்கப்பட்ட மல மாதிரியின் ஆய்வில், இருமல் ஆரம்பத்தில் இரண்டு நாட்களுக்குப் பிறகு கொரோனா இருப்பதைக் கண்டறியப்பட்டது என்று பூங்காவின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரூ ஜேம்ஸ் தெரிவித்தார்.

கொரோனா முடிவுகளை யு.எஸ். வேளாண்மைத் துறை (யு.எஸ்.டி.ஏ) தேசிய கால்நடை சேவைகள் ஆய்வகங்கள்நேற்று உறுதிப்படுத்தியதாக பூங்கா தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.