கண் மருத்துவமனையில் 75 மரங்களை வெட்ட ஐகோர்ட் தடை..!!

சென்னை எழும்பூரில் கண் மருத்துவமனை விரிவாக்கி அதிக கட்டடங்களை கட்டுவதற்கு அங்குள்ள 75 மரங்களை வெட்ட மருத்துவமனை நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. அதற்காக ஐகோர்ட் தற்போதைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனை நிருவாகம் இதற்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்குதொடுத்துள்ளார்.
இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. 75 மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்தது மட்டுமில்லாமல் அங்கு உள்ள மரங்களை சேதமில்லாமல் வேறு இடங்களில் நட்டு பராமரிக்க வாய்ப்புகள் உள்ளதா என மருத்துவமனை நிர்வாகம் பொதுப்பணித்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.