ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு.!

பாகிஸ்தான் நாட்டின் மீது கடந்த செவ்வாய் அன்று இரவு ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இன்று எதிர் தாக்குதலை தொடங்கியுள்ளது பாகிஸ்தான். ஈரானின் புரட்சிப் படைகள் முகாம்களை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இதனை நேரடியாக உறுதிப்படுத்தாத ஈரான், பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் பல்வேறு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தாக்குதல் நடத்தியதாக ஈரான் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, பாகிஸ்தான், ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியிருக்கிறது.

தற்பொழுது, இந்த தாக்குதலில் நான்கு குழந்தைகள் 3 பெண்கள் என மொத்தம் 7 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை, ஈரான் தீவிரவாத நிலைகள் மீது தாக்குதல்கள் நடத்தியதில், பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் கூறியது.

ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி!

ஏற்கனவே, மத்திய கிழக்கில் ஹமாஸ் – இஸ்ரேல் மோதல் மற்றும் செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இப்போது ஈரான் – பாகிஸ்தான் இடையே தாக்குதல் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.