இன்ஸ்டாகிராம் பயன்படுத்தியதற்காக 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை..

ரஷ்யாவில் தடையை மீறி இன்ஸ்டாகிராம் பயன்படுத்தியதற்காக மாடல் அழகிக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது ரஷ்யா அரசாங்கம்.

இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தியதற்காக தனக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாக ரஷ்ய மாடல் வெரோனிகா லோகினோவா தெரிவித்துள்ளார்.

ரஷ்ய டிஜிட்டல் உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனமான “ரோஸ்க்கோம்வொபோடா” படி, மார்ச் மாதம் “தீவிரவாத” நடவடிக்கைகளுக்காக ரஷ்ய நீதிமன்றம் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஐ தடை செய்த பின்னர், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தியதாக 6 ஆண்டுகள் சிறை தண்டனை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து, 18 வயதான வெரோனிகா தான் அழுவது போன்ற புகைப்படத்தையும், குன்ட்செவோ இன்டர்டிஸ்ட்ரிக்ட் வக்கீல் அலுவலகத்திலிருந்து பெற்றதாகக் கூறப்படும் கடிதங்களையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

author avatar
Varathalakshmi

Leave a Comment