பலாப்பழம் என்பது அனைவரும் விரும்பி உண்ணும் பழ வகைகளில் ஒன்று; பலாப்பழம் சுவைத்து மகிழ மிகவும் சிறந்தது. இதன் பிரத்யேக தித்திப்பான சுவை காரணமாகவே இப்பழம் தமிழின், தமிழ் வரலாறின் சங்க காலம் முதலே முக்கனிகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.

பலாப்பழம் பற்றி நன்கு அறிந்த நாம், பலாக்காயின் அருமையை உணர தவறிவிட்டோம். பெரும்பாலும் இதன் அருமையை உணர்ந்து, பலாக்காயின் பலன்களை அனுபவித்து வருபவர்கள் வட இந்தியர்களும், கேரளத்தவர்களும் தான். இந்த பதிப்பில் பலாக்காய் அளிக்கும் அற்புத நன்மைகளை பற்றி அறிந்து, அதனால் உண்டாகும் பலன்களை அனுபவிக்க முயல்வீராக!

சூப்பர் உணவு

பலாக்காயில் அதிக வைட்டமின்களும், தாதுக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன; இந்த காயை சமைத்து உண்ணும் பொழுது இறைச்சியை உண்பது போன்ற உணர்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது. பலாக்காய் உடலுக்கு அற்புத நன்மை பயக்கும் கார்போஹைட்ரேட் சத்துக்களை கொண்டுள்ளது.

உடல் எடை குறைத்தல்

உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் தினசரி 2 கப் பலாக்காயை சமைத்து உண்டு வந்தால், அது உடல் எடையை விரைவில் குறைக்க உதவும். இந்த 2 கப் பலாக்காய், 2 சப்பாத்திகளை விட, 1 பௌல் சாதத்தை விட குறைவான கலோரிகளை கொண்டதால் இது உடல் எடை குறைப்பில் பெரிதும் உதவும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க விரும்பும் நபர்களுக்கு பலாக்காய் ஒரு மிகச்சிறந்த மருந்து ஆகும். பலாக்காயில் நன்மை தரும் கார்போஹைட்ரேட் இருப்பதால், இது சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதோடு, சில நேரங்களில் இந்நோயை முற்றிலும் இல்லாமல் போக்க கூட பலாக்காய் உதவுவதாக பலாக்காய் உதவுகிறது.

கொழுப்பைக் குறைக்க

பலாக்காய் கொழுப்பைக் குறைக்க உதவும் விதத்தில் அதிக நார்ச்சத்துக்களையும், நன்மை அளிக்கும் கொழுப்புக்களையும் கொண்டுள்ளது; கார்போஹைரேட் மற்றும் கொழுப்பைக் குறைத்து, நார்ச்சத்து, புரதம் போன்ற மற்ற சத்துக்களை அதிகரித்தால் உடலின் கொலஸ்ட்ரால் அளவு எளிதில் குறைந்து விடும்.

குடல் நோய்கள்

பலாக்காய் அதிக நார்ச்சத்தினை கொண்டுள்ளதால், இவை குடல்களின் சிறப்பான இயக்கத்திற்கு பெரிதும் உதவுகின்றன; சரியான அளவு நார்ச்சத்து கிடைப்பதால் குடல்களின் இயக்கம் மேம்பட்டு, குடல் நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

மேலும் பலாக்காயில் இருக்கும் சத்துக்கள் மலக்குடல் தொடர்பான நோய்களையும் போக்கி, மலக்குடல் புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்க பெரிதும் உதவுகின்றன.

நீண்ட நேரம்

பலாக்காய் கொண்டு தயாரித்த உணவுகளை உண்டு வந்தால், அடிக்கடி பசி ஏற்படுவது நிச்சயம் தடுக்கப்படும் என்று பல ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. பலாக்காய் ஒரு நல்ல பசி தாங்கும் உணவாக செயல்படுகிறது; எடையை குறைக்க நினைக்கும் நபர்கள் தங்கள் டயட் உணவு பட்டியலில் கட்டாயம் பலாக்காயையும் சேர்த்துக்கொள்ளல் நல்லது.

பலாக்காயின் நன்மைகளைப் பற்றிய சரியான விழிப்புணர்வு மற்றும் சரியான அறிதல் இல்லாமையால் பல இடங்களில் மக்கள் இதை உண்பதில்லை. ஆனால் அனைத்து வகை காய்களினும் அதிக பலன்களை தரவல்லது பலாக்காய் ஆகும்; இந்த உண்மை பலரையும் அடைய பதிப்பினை பகிர்ந்து உதவுங்கள்; மக்களை விழிப்படைய செய்யுங்கள்!