ஒரே நாளில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 22 பேர் அதிரடி கைது.!

கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 22 பேர் ஒரே நாளில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பம் எனும் மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே, கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், கடலூர் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்னர். மேலும், 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மொத்தம் 226 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மதுக்கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான புகார்களை 7418846100 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.