Connect with us

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! 200 பேர் பலி!

afghanistan flooding

உலகம்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! 200 பேர் பலி!

Afghanistan Flooding : ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்ட நிலையில், அதில் சிக்கி 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருவதன் காரணமாக பாக்லான் மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் சிலர் காயமடைந்துள்ளார்கள். காயமடைந்தவர்கள் தற்போது  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும், இந்த வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும்,  வெள்ளிக்கிழமை (மே 10) பெய்த கனமழைமழை வடகிழக்கு படாக்ஷான் மாகாணம், மத்திய கோர் மாகாணம் மற்றும் மேற்கு ஹெராத் ஆகிய பகுதிகளிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியதாகவும் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் மதீன் கானி தெரிவித்துள்ளார்.

பாக்லான் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை  ஐநாவின் சர்வதேச அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. வெள்ளத்தில் 200 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசரகால பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் எனவும், மற்றும் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் வேலைகளும் தீவிரமாக நடந்து வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Continue Reading

More in உலகம்

To Top