Haj pilgrimsHaj pilgrims

வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 19 பேர் உயிரிழப்பு!

By

சவூதி அரேபியா : கடும் வெப்ப அலையால் ஹஜ் புனிதப் பயணம் சென்ற ஜோர்டனைச் சேர்ந்த 14 பேர், ஈரானைச் சேர்ந்த 5 பேர் என 19 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்லாமியர்களின் ஸ்தாபகரான முஹம்மது நபியின் பிறப்பிடமான சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு முஸ்லிம்கள் மேற்கொள்ளும் வருடாந்திர புனித யாத்திரை தான் ‘ஹஜ்’ ஆகும்.

இந்த ஆண்டு சுமார் 1.8 மில்லியன் மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவூதி அரேபியா, பாலைவனங்களுடன் கூடிய வெப்பமான மேற்கு ஆசியப் பகுதியில் அமைந்துள்ளதால், அப்பகுதி பொதுவாக வெப்பமாக இருக்கும்.

இந்நிலையில், கடும் வெப்ப அலையால் ஜோர்டானைச் சேர்ந்த 14, ஈரானைச் சேர்ந்த 5 பயணிகள் என 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அங்கு புனிதப் பயணம் வந்துள்ள 2,760 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக, மெக்காவில் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி வருவதால், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு வருபவர்களுக்கு தண்ணீர் வழங்க ஹஜ் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 240 பேர் ஹஜ்ஜில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023