SSC Recruitment 2024

மிஸ் பண்ணிடாதீங்க.. டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை.! 17727 காலியிடங்கள்..

By

SSC CGL 2024 : ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (SSC) குரூப் B மற்றும் குரூப் C -இல் உள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) 2024 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதிகளையும் அறிவிப்பைப் படித்துவிட்டு அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

காலியிட விவரங்கள்:

குரூப் – B

  1. உதவி பிரிவு அலுவலர் (மத்திய செயலக சேவை) – 20 முதல் 30 வயது
  2. உதவி பிரிவு அதிகாரி (IB) – 18 முதல் 30 வயது
  3. உதவி பிரிவு அலுவலர் (MOR) – 20 முதல் 30 வயது
  4. உதவி பிரிவு அதிகாரி (MOEA) – 20 முதல் 30 வயது
  5. உதவி பிரிவு அதிகாரி (AFHQ) – 20 முதல் 30 வயது
  6. உதவி பிரிவு அதிகாரி (Ele & IT) – 18 முதல் 30 வயது
  7. உதவி பிரிவு அலுவலர் – 18 முதல் 30 வயது
  8. வருமான வரி ஆய்வாளர் (CBDT) – 18 முதல் 30 வயது
  9. இன்ஸ்பெக்டர் (மத்திய கலால்) (CBIC) – 18 முதல் 30 வயது
  10. இன்ஸ்பெக்டர் (தடுப்பு அதிகாரி) (CBIC) – 18 முதல் 30 வயது
  11. இன்ஸ்பெக்டர் (எக்ஸாமினர்) (CBIC) – 18 முதல் 30 வயது
  12. உதவி அமலாக்க அதிகாரி – 18 முதல் 30 வயது
  13. சப் இன்ஸ்பெக்டர் (மத்திய புலனாய்வு பிரிவு) – 20 முதல் 30 வயது
  14. இன்ஸ்பெக்டர் பதவிகள் (அஞ்சல் துறை) – 18 முதல் 30 வயது
  15. இன்ஸ்பெக்டர் (மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, நிதி அமைச்சகம்) -18 முதல் 30 வயது
  16. உதவி மற்றும் உதவிப் பிரிவு அலுவலர் (பிற அமைச்சகங்கள்/ துறைகள்/
    நிறுவனங்கள்) – 18 முதல் 30 வயது
  17. நிர்வாக உதவியாளர் (CBIC) – 18 முதல் 30 வயது
  18. ஆராய்ச்சி உதவியாளர் (தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)) – 18 முதல் 30 வயது
  19. பிரிவு கணக்காளர் (C&AG இன் கீழ் உள்ள அலுவலகங்கள்) – 18 முதல் 30 வயது
  20. சப் இன்ஸ்பெக்டர் (தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) – 18 முதல் 30 வயது
  21. சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர் (நார்கோடிக்ஸ் கண்ட்ரோல் பீரோ (MHA)) – 18 முதல் 30 வயது
  22. ஜூனியர் புள்ளியியல் அதிகாரி (புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்) -18 முதல் 32 வயது

குரூப் – C

  1. ஆடிட்டர் (சி & ஏஜி) – 18 முதல் 30 வயது
  2. தணிக்கையாளர் (CGDA) – 18 முதல் 30 வயது
  3. தணிக்கையாளர் (பிற அமைச்சகம்/ துறைகள்) – 18 முதல் 30 வயது
  4. கணக்காளர் (C&AG) – 18 முதல் 30 வயது
  5. கணக்காளர் (கணக்குக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல்) – 18 முதல் 30 வயது
  6. கணக்காளர் – இளநிலை கணக்காளர் – 18 முதல் 30 வயது
  7. அஞ்சல் உதவியாளர் – வரிசையாக்க உதவியாளர் – 18 முதல் 30 வயது
  8. மூத்த செயலக உதவியாளர் -மேல் பிரிவு எழுத்தர்கள் – 18 முதல் 30 வயது
  9. மூத்த நிர்வாக உதவியாளர் – 18 முதல் 30 வயது
  10. வரி உதவியாளர் (CBDT) – 18 முதல் 30 வயது
  11. வரி உதவியாளர் (CBIC) – 18 முதல் 30 வயது
  12. சப்-இன்ஸ்பெக்டர் (மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு,
    நிதி அமைச்சகம்) – 18 முதல் 30 வயது

கல்வி தகுதி 

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டம் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

  • விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100/-
  • SC,  ST, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், PwBD-க்கு:  கட்டணம் கிடையாது.
  • கட்டண முறை: ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

முக்கிய நாட்கள்

விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 24-06-2024
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 24-07-2024
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 25-07-2024
விண்ணப்பப் படிவத்தை சரிசெய்வதற்கான தேதிகள்  10-08-2024 முதல் 11-08-2024 வரை

தேர்வு குறித்த விவரம்:

  1. முதற்கட்ட தேர்வு நடைபெறும் மாதம் : செப்டம்பர் – 2024
  2. இரண்டாம் கட்ட தேர்வு நடைபெறும் மாதம்: டிசம்பர் 2024

தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரி, வேலூர்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த வேலையில் சேர விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான (https://ssc.gov.in) இணையதளத்திற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரத்தை விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும், இந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்த இந்த PDF ஐ க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Dinasuvadu Media @2023