Ukraine Accident: உக்ரைனில் ரஷ்யப் படைகள் சென்ற டிரக் மினிபஸ் மீது மோதியதில் 16 பேர் பலி !

ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் பிராந்தியமான டொனெட்ஸ்கில் நடந்த சாலை விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொனெட்ஸ்கில் ரஷ்ய வீரர்களை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று மினிபஸ் மீது மோதியதில் 16 பேர் உயிரிழந்ததாக ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் தலைவர் டெனிஸ் புஷிலின் தெரிவித்தார்.

ஆக்கிரமிக்கப்பட்ட நகரங்களான ஷக்தார்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் ஒப்லாஸ்டில் உள்ள டோரெஸ் ஆகிய நகரங்களுக்கு இடையே இந்த விபத்து நடந்துள்ளது.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment