சிறப்பு ரயில்கள் இயக்கியபோது 110 பேர் உயிரிழப்பு.!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள

By bala | Published: Jul 11, 2020 12:56 PM

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிமாநில தொழிலார்கள்  வேலை இழந்த நிலையில் தங்களது சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் தவித்து வருகிறார்கள், மேலும் பலர் நடந்தே தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 1ம் தேதி முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது, மேலும் இதுவரை 4,611 சிறப்பு ரயில்கள் மூலம் 63.07 லட்சம் பேர் தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர், மேலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் போது 110 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரம் கூறியுள்ளது.

மேலும் இவர்களுக்கு ஏற்கனேவே உடல் நல பாதிப்பு மற்றும் கொரோனா தொற்று போன்ற பாதிப்புகள் இருந்துள்ளது. மேலும் விபத்து உள்ளிட்ட காரணங்களாக இருந்துள்ளன, எனினும் விபத்து உள்பட காரணங்கள் மற்றும் ரயில் பாதையில் உரிந்தவர்கள் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை, மேலும் பயணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டதாகவும், இதனால் அவர்கள் உயிரிழக்கவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc