சீன உணவகத்தில் கண்டறியப்பட்ட 100 மில்லியன் வருட பழைமையான டைனோசர் தடம்.!

உலகின் மிகப்பெரிய டைனோசரின் கால்தடங்கள் சீனாவில் கண்டுபிடிக்கபட்டுள்ளது

100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் சுற்றித் திரிந்த உலகின் மிகப்பெரிய டைனோசர் இனமான 26 அடி நீளமுள்ள சௌரோபாட் கால்தடங்கள் சீனாவில் உள்ள உணவகம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது சீனாவின்  இந்தப் பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்ததற்கான முதல் ஆதாரமாக கருதப்படுகிறது.

பழங்கால ஆராய்ச்சியாளர்கள் காலடித்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் மூலம்  அவை 26 அடி நீளம் கொண்ட  இரண்டு மிகப்பெரிய டைனோசர்களின் கால்தடங்கள் என கண்டுபிடிக்கப்பட்டது.

 

author avatar
Varathalakshmi

Leave a Comment