சோகம்! சிலியில் காட்டுத் தீ விபத்து : 10 பேர் பலி!

அமெரிக்காவின் சிலி, மத்திய சிலி ஆகிய பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியுள்ளது. இந்த தீ விபத்தால் அங்கு இருந்த 1,000 வீடுகளுக்கு மேல் தீ பிடித்து எரிந்தது.  இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்தத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது . உடனடியாக அவர்களை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தீ பரவலை தடுக்கும் வகையில், விமானங்களின் உதவியுடன் நீர் எடுத்து வரப்பட்டு,  நீர் ஊற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது.

கென்ய தலைநகரில் எரிவாயு வெடித்து விபத்து…2 பேர் பலி, 200 பேர் காயம்.!

திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்துக்கான காரணம் என்னவென்பது குறித்த சரியான தகவல் இதுவரை வெளிவராத நிலையில், ஒரு பக்கம் விசாரணையும் நடந்து வருகிறது. மேலும், தீ பரவ வாய்ப்புள்ள இடங்களில் இருக்கும் மக்கள், பாதுகாப்பான முகாம்களுக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்படும் வருகிறார்கள்.

இந்த தீ விபத்தால் காடுகள் அழிந்து நாசமானது எனவும், இதுவரை 10 பேர் உயிரிழந்தனர்.  கடற்கரை நகரங்களை இந்த காட்டு தீயால் சாம்பல் புகைனால்  அடர்ந்த மூடுபனி போல மூடி காணப்படுகிறது என்றும்  மத்திய பகுதிகளான வினா டெல் மார் மற்றும் வால்பரைசோவில்  ஆகிய பகுதிகளில் வசித்து வந்த மக்கள் தங்கள் வீடுகளை வெளியேற காரணமாக அமைந்தது என்றும் வால்பரைசோவின் மாநில பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment