முதலமைச்சர் பதவி…!ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டி கையெழுத்து …!என்ன பாத்தா பன்னீர்செல்வத்துக்கு அவ்ளோ பயம்…!டிடிவி.தினகரன் பகீர் தகவல்

துணை-முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்துக்கு  பதிலடி கொடுக்கும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.

பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , தனது மனசாட்சி கேள்வி எழுப்பியதால்தான் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்ததாகவும், அவர் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் பரபரப்பு தகவல்களைதெரிவித்தார்.

பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.

பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .

இதனால் தினகரன் தானக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.

இந்நிலையில் தினகரன் மற்றும் ஓ.பி.எஸ்&ஈ.பி.எஸ் இடையே கடும் வர்தைப்போர் நடந்து வருகிறது.

அதற்கு ஏற்றாற்போல்  மன்னார்குடியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை-முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசுகையில்,டி.டி.வி. தினகரன் தேர்தலில் 200 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கூறுவது பகல் கனவு.டி.டி.வி. தினகரன் ஆர்.கே நகரில் பெற்ற வெற்றியை போல் வெற்றி பெறுவோம் என கூறுகிறார். ஆர்.கே நகர் வெற்றி, 20 ரூபாய் டோக்கனால் வந்த வெற்றி. ரூ.10 ஆயிரம் தருவதாக கூறி 20 ரூபாய் நோட்டை கொடுத்து ஏமாற்றியது, உலகத்தில் தினகரன் ஒருவர் மட்டும்தான். இந்த ஆட்சியை அகற்றும் தினகரனின் எண்ணம் அ.தி.மு.க தொண்டர்களிடம் பலிக்காது. அ.தி.மு.க தொண்டர்கள் அதை முறியடிப்பார்கள் என்று பேசினார்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.ஆவர் கூறுகையில் ,என்னை தாக்கி பேசுகிறேன் என்கிற பெயரில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் என்னை தமிழகம் முழுவதும் பிரபலபடுத்துகிறார்.நான் மிரட்டி கையெழுத்து போட சொன்னதும், ஓ.பன்னீர்செல்வம் முதல் அமைச்சர் பதவியில இருந்தும் கையெழுத்து போட்டிங்கனா. என்ன பாத்தா அவ்ளோ பயம் இருக்குல என்று காட்டமாக பேசியுள்ளார்.

DINASUVADU

Recent Posts

மீண்டும் ரூ.55,000- ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.640 உயர்வு.!

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…

8 mins ago

நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை ! ஒப்பு கொண்ட மும்பை கேப்டன் !

சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…

42 mins ago

திருமணத்திற்காக ஷாப்பிங் சென்ற போது பயங்கர விபத்து.. 6 வயது சிறுவன் உள்பட 5 பலி.!

சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…

51 mins ago

ரூ.5 லஞ்சம் வாங்கிய கம்பியூட்டர் ஆபரேட்டர்.! கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!

சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி  ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…

59 mins ago

கெஜ்ரிவால் வீட்டில் நடந்தது என்ன.? ஆம் ஆத்மி விளக்கமும்.. ஸ்வாதி மாலிவால் பதிலும்…

சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…

1 hour ago

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது.!

சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…

2 hours ago