Categories: மதுரை

மதுரை பாலமேட்டில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது ஜல்லிக்கட்டு!

பாலமேட்டில் ஆயிரத்து 2 காளைகளும் ஆயிரத்து 188 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. அரசு விதிகளுக்கு உட்பட்டு தான் போட்டிகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர். முதலில் கொண்டு வரப்பட்ட 5 கோவில் காளைகளுக்கு அமைச்சர் உதயகுமார் தங்கக் காசு பரிசு வழங்கினார். இதனைத் தொடர்ந்து போட்டிக் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அணி அணியாக காளைகளும் மாடுபிடி வீரர்களும் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கபபட்டனர்.
முதல் அணியில் 55 காளைகளும் இரண்டாவது அணியில் 70 காளைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. மாடுகளின் கொம்பை பிடித்தல் உள்ளிட்ட விதிமீறல்களுக்காக சிலர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ஒவ்வொரு அணியிலும் சிறப்பாக மாடு பிடித்த 5 மாடுபிடி வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெற்றனர். மாடுகள் முட்டி காயம் அடைந்த வீரர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியை ஒட்டி, மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன…

Recent Posts

இந்த படத்தில் ராஷ்மிகாவை போடுங்க சார்! சிபாரிசு செய்த சிவகார்த்திகேயன்?

சென்னை : தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க ராஷ்மிகா மந்தனாவை சிவகார்த்திகேயன் சிபாரிசு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி…

9 mins ago

பிசிசிஐக்கு உதவும் தோனி? ஃபிளெமிங்கை தலைமை பயிற்சியாளராக சம்மதிக்க வைக்க புதிய திட்டம்!

சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் செயலாற்ற வைக்க தோனி பிசிசிஐ உதவுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான…

37 mins ago

பாரம்பரியமிக்க பருப்பு உருண்டை குழம்பு இதுபோல செஞ்சி கொடுங்க..!

பருப்பு உருண்டை குழம்பு -பாரம்பரியமான பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: கடலை பருப்பு =அரை கப் துவரம்…

43 mins ago

நடுவானில் குலுங்கிய சிங்கப்பூர் விமானம்.. ஒருவர் உயிரிழப்பு.!

சென்னை: லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் குலுங்கியதில் ஒருவர் உயிரிழந்தார். இங்கிலாந்தின் லண்டன் ஹீத்ரோவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்…

53 mins ago

மரம் விழுந்து கணவர் பலி..மனைவி காயம்! பத பதைக்க வைக்கும் வீடியோ காட்சி!

சென்னை : ஹைதராபாத்தில் மருத்துவமனைக்குச் சென்ற தம்பதியினர் மீது மரம் விழுந்ததில் கணவர் உயிரிழந்தார். மனைவி படுகாயம் அடைந்தார். இன்று ஹைதராபாத்தில் உள்ள பொலராம் அரசு மருத்துவமனைக்கு…

1 hour ago

இரவு வரை இந்த 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.!

சென்னை: அடுத்த மூன்று நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்கிற மாட்ட வாரியான பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு…

1 hour ago