ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது…!!

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது. ஏ.சி., சிமெண்ட், டயர் மீதான வரி குறைக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. நாட்டின் மறைமுக வரிகளுக்கு மாற்றாக, ஜிஎஸ்டி வரி கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. 5 முதல் 28 சதவீதம் வரை 4 அடுக்குகளாக வரி சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுக்க மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கவுன்சில் அவ்வப்போது கூடி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது.
இதில், ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலை எளிமைப்படுத்துவது பற்றியும், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொகையை திரும்ப அளிப்பது பற்றியும் விவாதிக்கப்படுகிறது. ஆடம்பர பொருட் கள், புகையிலை பொருட்கள் போன்றவற்றுக்கு மட்டும் 28 சதவீத வரி நீடிக்கும் என தெரிகிறது. மற்ற 99 சதவீத பொருட்கள், 18 சதவீதத்துக்கு கீழ் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment