இதேநாளில் அன்று உலகக்கோப்பை நம் கையில் …!தல அடிச்ச அந்த லாஸ்ட் பால் ஹெலிகாப்ட்டர் ஷாட்!28 ஆண்டுகால கனவை நனவாக்கியது தோனி தலைமை ..!

கபில்தேவ் தலைமையில் இந்திய அணி 1983 உலகக்கோப்பையை வென்ற  அப்போது ‘கபில்ஸ் டெவில்ஸ்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டது.

1983-க்குப் பிறகு 2003 உலகக்கோப்பையில் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், கங்குலி, சேவாக் ஆகியோரது திகைப்பூட்டும் பேட்டிங்கினாலும் (குறிப்பாக சச்சின்), ஜாகீர் கான், ஸ்ரீநாத், ஆஷிஷ் நெஹ்ராவின் அதியற்புத பந்து வீச்சினாலும் இறுதிப் போட்டி வரை வந்து கோப்பையை வெல்ல முடியாமல் போனது. இடையில் 2007 உலகக்கோப்பை படுதோல்வி ஒரு விழிப்புணர்வை தோற்றுவித்தது.

மீண்டும் உலகக்கோப்பையை இந்தியா எப்போது வெல்லும் என்று ரசிகர்கள் காத்திருந்து 28 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில் இன்றைய ஏப்ரல் 2-ம் தேதியில் அன்று தோனி படை இலங்கையை வீழ்த்த்தி உலக சாம்பியன்களானது இந்திய அணி.

 

கடைசி பந்தில் தோனி, நுவான் குலசேகராவை அடித்த அந்த மிகப்பெரிய சிக்ஸ் அதன் பிறகு மட்டையை வாள் போல் சுழற்றி அவர் கொண்டாடிய விதம் இந்திய ரசிகர்கள் மனதில் விட்டு நீங்கா இடம்பெற்ற ஒரு நிகழ்வாகும்.

 

1983-ல் விவ் ரிச்சர்ட்ஸ் எங்கு போட்டாலும் அடித்து நொறுக்கியபோது கபில்தேவ் எடுத்த கேட்சை மறக்க முடியுமா? அதுவும் கேட்சுக்கு ஓடி வந்த யஷ்பால் சர்மாவை கை காட்டி நிறுத்தி விட்டு நெருக்கடியில் அற்புதமான ரிச்சர்ட்ஸுக்கு கபில் எடுத்த அந்த கேட்ச் திருப்பு முனையானது. 38 ஆண்டுகள் கழித்து தோனி முன்னால் களமிறங்கிய உறுதிப்பாடு இன்னொரு சாதனை இரவானது

.

இலங்கை அணியும் 1996 சாதனைக்குப் பிறகு இன்னொரு உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்பு பெற்று மிக அருகில் வந்து தோனி படையினால் கனவு சிதைந்த நிலையில் இலங்கை திரும்பியது.

277 ரன்கள் இலக்கை எதிர்த்து இந்தியா 7 ஓவர்களுக்குள் சேவாக், சச்சினை இழந்தது. ஆனால் தோனி, கவுதம் கம்பீர் இணைந்து அனாயசமாக அலட்டிக் கொள்ளாமல் 109 ரன்களைச் சேர்த்தனர். தோனி 79 பந்துகளில் 91 ரன்கள் கம்பீர் 122 பந்துகளில் 97, உலகக்கோப்பை இறுதியில் சதம் எடுக்கும் அந்த ‘எலைட் கிளப்’பில் இடம் பிடிக்கும் வாய்ப்பை கம்பீர் நூலிழையில் தவற விட்டார். சச்சின் டெண்டுல்கர் ஆடும்போதே ஒரு உலகக்கோப்பையை வாங்கி விட வேண்டும் இதுதான் சச்சின் இந்திய கிரிக்கெட்டுக்கு செய்தவற்றுக்கு நாம் கொடுக்கும் பரிசு என்று தோனி படை களத்தில் இறங்கியதை நெகிழ்ச்சியுடன் சச்சின் டெண்டுல்கர் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுவும் 2007 உலகக்கோப்பையில் படுதோல்வியடைந்து வெளியேறியபோது அந்த  உலகக்கோப்பை தொடரே களையிழந்து சோபிக்காமல் போனது. அப்போதிலிருந்தே 2011 உலகக்கோப்பை கனவு இந்தியர்களிடையே வேரூன்றத் தொடங்கியது. அந்தக் கனவை தோனி தலைமையில் நினைவாக்கியது இந்திய அணி.

சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் இந்த வெற்றி தினம் பற்றி, “7 ஆண்டுகளுக்கு முன்பாக 15 இந்தியர்கள். ஒரு தென் ஆப்பிரிக்கர் (கேரி கர்ஸ்டன்), பில்லியன் மக்களுக்காக செய்து காட்டினர்.” என்று அந்தக் கணத்தை நெகிழ்ச்சியுடன் நினைவுகூரினார்.

விரேந்திர சேவாக்: ஆயுள் முழுதுக்குமான கணம். இதே நாளில் 7 ஆண்டுகளுக்கு முன்பாக பல கோடி மக்கள் மகிழ்ச்சியில் எழுச்சியுற்றனர். என்னவோர் இரவு! அந்த இரவில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

ஹர்பஜன் சிங்: 2011 உலகக்கோப்பை சாம்பியன்கள். என் வாழ்நாளில் சிறந்த தினம். நேசிக்கும் அனைவருக்கும் நன்றி.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

2 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

3 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

4 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

5 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

5 hours ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

5 hours ago