நீங்கள் உணவு சமைக்கும் பாத்திரம் ஆரோக்கியம் அளிப்பது தானா?

நம் வீடுகளில் உணவுப் பொருட்களை சில்வர் அல்லது அலுமினியப் பாத்திரங்கள் போன்றவற்றில் சமைப்பர்; ஆனால் இது போன்ற பாத்திரங்களில் சமைப்பது நல்லதா? ஆரோக்கியமானதா என்று ஒருமுறை கூட யோசிக்காமல் இதை வழக்கமாக தொடர்ந்து வருகின்றோம். சாப்பாடு தயாரிக்க உதவும் உணவுப்பொருட்களின் தரத்தை பார்த்து பார்த்து வாங்கி, உணவு சமைக்கும் நாம், உணவு தயாரிக்க உதவும் பாத்திரங்களின் உண்மைத் தன்மை குறித்து அறிய மறந்து விடுகிறோம்.

இந்த பதிப்பில் எந்த வகையான பாத்திரங்களை உணவு சமைக்க பயன்படுத்த வேண்டும் மற்றும் எவ்வகை பாத்திரங்கள் ஆரோக்கியமானவை என்று படித்து அறியலாம்.

களிமண் பாத்திரங்கள்

களிமண்ணால் தயரிக்கப்பட்ட பாத்திரங்கள் உணவுப்பொருட்களின் 100% சத்துக்களும் உணவினை விட்டு நீங்காமல் உணவில் இடம்பெற உதவும். ஆனால் இந்த பாண்டங்களில் சமைக்க தேவையான நேரம் இரட்டிப்பாகும்.

இந்த கால அவகாசம் என்பது மட்டுமே களிமண் பாத்திரங்களில் காணப்படும் பின்னடைவு; சத்தான உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ உணவு சமைக்க சற்று கூடுதல் நேரம் செலவழிப்பதிலும், உணவுக்காக சற்று காலம் காத்திருப்பதிலும் தவறில்லை.

தாமிர பாத்திரங்கள்

தாமிர பாத்திரங்கள் அதாவது காப்பர் பாத்திரங்கள் உடலுக்கு நன்மை பயப்பவை என சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன; இதையே தான் நம் முன்னோர்களும் முன்மொழிந்து சென்றுள்ளனர். நிக்கல் மற்றும் டின் போன்றவை கலக்காத தாமிர பாத்திரங்களை சமைப்பதற்கு பயன்படுத்தல் வேண்டும்.

அவ்வாறு பயன்படுத்துவதால் உணவுப்பொருட்களின் சத்துக்களில் 97% சத்துக்கள், உணவிலேயே நிலைநிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பித்தளை பாத்திரங்கள்

பித்தளை பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுகளின் சத்துக்கள் 93% வரை உணவிலேயே நிலை நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது; ஆனால் இதுவே அலுமினியப் பாத்திரங்களில் உணவு சமைத்தால், அதில் வெறும் 13% சத்துக்களே மிஞ்சுகின்றன.

ஆகவே பித்தளை பாண்டங்களில் சமைக்க முயலுங்கள்; இவற்றை கழுவி பராமரிப்பது மட்டும் சற்று கடினம். ஆனால் ஆரோக்கியத்திற்கு அதிக பலன்கள் கிடைக்கும்.

கண்ணாடி பாத்திரங்கள்

கண்ணாடி பாத்திரங்களில் உணவு சமைப்பது நல்லது என்று பல ஆராய்ச்சி முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன; சில்வர் மற்றும் அலுமினிய பாத்திரங்களைக் காட்டிலும் இந்த கண்ணாடி பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுகள் அதிக சத்துக்களை கொண்டிருப்பதாகவும், அதிக ஆரோக்கியம் தருவதாகவும் கூறப்படுகிறது.

இரும்பு பாத்திரங்கள்

இரும்பு பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுகள் அதிக சுவை மிகுந்ததாகவும், ஆரோக்கியமானதாகவும், சத்துக்கள் நிறைந்து விளங்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவை சற்று கனம் கொண்டவை; ஆனால் அதிக பலன் அளிப்பவை.

author avatar
Soundarya

Leave a Comment