அஜித்தின் ஸ்டைலை பாலோ பண்ணும் விஜய் சேதுபதி !

நடிகர் விஜய் சேதுபதி கோலிவுட் சினிமாவில் இருக்கும் உச்ச நடிகர். இந்நிலையில் இவர்  கோலிவுட் சினிமாவில் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். இவர் ஒரு வருடத்தில் எப்படியும்  டஜன் கணக்கில் பல படங்களில் நடித்து விடுவார்.
இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி விஜயுடன் “தளபதி 64′ படத்தில் நடிக்க இருக்கிறார். இதையடுத்து இவர் சிரஞ்சீவியுடன் “சைரா நரசிம்ம ரெட்டி” படத்தில் நடித்துள்ளார். இதே போல் அவர் அமீர்கானுடன் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் அஜித் அமிதா பச்சன் நடித்த “பிங்க்” என்னும்  பாலிவுட் படத்தை தமிழில் ரீமேக் செய்து நடித்தார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியும் அதே போல் ஒரு பாலிவுட் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறாராம்.