மலையாளத்தில் களமிறங்கிய லேடி சூப்பர் ஸ்டாரின் திரில்லர் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.!

தென்னிந்திய திரையுலகில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார்  என்று அழைக்கப்படும் நயன்தாரா மலையாள திரைப்படத்தில் நடிக்க களமிறங்கிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் இமைக்கா நொடிகள். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்துமுடித்து வெளிவரவுள்ளது.மேலும், நெற்றிக்கண், அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நயன்தாரா அடுத்து நடிக்கவுள்ள மலையாள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் ‘குஞ்சாக்கோ போபன்’ நடிக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு “நிழல்” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இத்திரப்படத்தை பிரபல இயக்குனரானஅப்பு என்.பட்டாதிரி என்பவர் இயக்கவுள்ளார். இந்த படம் , திரில்லராக இருக்கும் என கூறப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.