வேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குனர் காலமானார்..!

வேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குனர் காலமானார்..!

இயக்குனர் பாபு சிவன் உடல்நலக் குறைவால் காலமானார்.

இயக்குனர் பாபு சிவன் இயக்குனர் தரணியின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார், குருவி படத்தின் கதை கூட அவர் எடுத்ததுதான், இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜயை வைத்து வேட்டைக்காரன் என்ற படத்தை இயக்கினார்.

மேலும் அந்த படத்தை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராசாத்தி என்ற சீரியலை இயக்கினார், இந்த நிலையில் 54 வயதான இவருக்கு கல்லிரல், சிறுநீரக போன்ற பிரச்சனையால் இவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார், இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சை காக சேர்த்தனர், ஆனால் நேற்று இரவு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் சினிமாவை சார்ந்த பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள், அந்த வகையில் வேட்டைக்காரன் படத்தில் இசையமைத்த விஜய்ஆண்டனி தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில் " வேட்டைக்காரன் இயக்குனர் பாபு சிவனின் திடீர் மறைவு குறித்து நான் மிகுந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைகிறேன். வேட்டைக்காரன் படத்தில் எனது யோசனைகளை நிறைவேற்ற எனக்கு முழு சுதந்திரம் அளித்தவர். மிகவும் எளிமையான மனிதர். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். என்று பதிவு செய்துள்ளார்.

Latest Posts

சுப்பையா சண்முகத்தை உறுப்பினராக நியமித்திருப்பது, பச்சை அதிகார துஷ்பிரயோகம் - மு.க.ஸ்டாலின்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே மோதல்.. 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
விடிய விடிய பெய்த கனமழையால் கடல் போல கட்சி தரும் சென்னை அண்ணா சாலை!
8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..... வானிலை ஆய்வு மையம்..!
முட்டை விலை 15 காசுகள் குறைந்து 4.75 க்கு விற்பனை...!
#IPL 2020: KKR கனவை தடுக்குமா CSK...?
தொடங்கியது பருவமழை! தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்!
யாரை வாழ்க்கையில மிஸ் பண்றீங்க .... கண்கலங்கும் போட்டியாளர்கள்!
இந்தியாவில் நேற்று கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
விசிக தலைவர் திருமாவளவன் உட்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு!