பணமோசடி புகாருக்கு விளக்கம் அளித்த எஸ்.ஏ சந்திர சேகர் !

இயக்குநர் சந்திர சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டு “டிராபிக் ராமசாமி” எனும் படத்தை இயக்கி ,தயாரித்து , நடித்திருந்தார்.இந்நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் தமிழ்நாட்டு வெளியிட்டு உரிமையை  கனடா நாட்டை சேர்ந்த பிரமானந்த் சுப்பிரமணியன் என்பவர் பெற்றிருந்தார்.இந்நிலையில் இதற்காக அவர் 20 லட்சம் முன் பணம் கொடுத்து க்ரீன் சிக்னல் நிறுவனம் சார்பில் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த பணத்தை திருப்பி தரவில்லை என இவர் சமீபத்தில் எஸ்.ஏ சந்திர சேகர் மீது வழக்கு தொடர்ந்தார்.
 
இந்நிலையில் தற்போது க்ரீன் சிக்னல் நிறுவனம் இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் எஸ்.ஏ சந்திர சேகர் இந்த புகாரை மறுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அவர் 20 லட்சம் ரூபாயை முன்பணமாக கொடுத்து ஒப்பந்தம் போட்டார்..பின்பு அவரால் இந்த படத்திற்கான
பின்பு அவரால் மீதி தொகையை கொடுக்க முடியாததால் அந்த பணத்தை தரமுடியவில்லை. பின்பு படம் வெளியிட்டு தேதிக்கு முன்பு இந்த படத்தை வேண்டாம் என்று அவர் கூறிவிட்டார். இதநாள் வியாபார சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்க முடியாமல் போனதாகவும் கூறியுள்ளார்.மேலும் படம் வெளியிடும் தேதியை தயாரிப்பு சங்கம் முடிவு செய்வதாக அந்த படத்தின் வெளியிட்டு தேதியை தள்ளி வைக்க முடியாத நிலை. மேலும் கடைசி நேரமாக இருந்ததால் படத்தை யாரும் வாங்க முன்வரவில்லை.
இதனால் எஸ்.ஏ சந்திரசேகர் இந்த படத்தை தமிழ் நாடு முழுவதும் வெளியிடும் நிலா ஏற்பட்டது.இதனால் அவர் பல கோடிக்கு நஷ்டத்தையும் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் அந்த அறிக்கையில் இந்த படத்திற்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத மணிமாறன் போலீசில் புகார் கொடுத்தது. எஸ். ஏ சந்திர சேகரின் புகழை கெடுக்கவும் , மனஉளைச்சலை ஏற்படுத்தவும் திட்ட மிட்டு செயலாற்றியுள்ளார்கள் என்று அவர் கூறியுள்ளார்.