ரூ.31,000 கோடி ஏழைகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது -பிரதமர் மோடி

பிரதமர் மோடி தற்போது நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறது. ஊரடங்கு

By gowtham | Published: Jun 30, 2020 04:44 PM

பிரதமர் மோடி தற்போது நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறது. ஊரடங்கு தொடர்பாக 6-வது முறையாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதில், சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்ட பொதுமுடக்கத்தால் பல உயிரிகள் காப்பாற்றப்பட்டது. கொரோனாவால் இந்தியாவில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாக உள்ளது.

மேலும், பொதுமுடக்கத்தை பல இடங்கள் சரியாக பின்பற்றவில்லை.  பிற நாடுகளை ஒப்பிடுகையில், நமது நாடு கொரோனவை சிறப்பாக எதிர்கொண்டுள்ளது. இப்போது செய்யக்கூடிய சிறிய தவறுகள் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடலாம். விவசாயிகளுக்கும், வரிசெலுத்துவோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பருவநிலை காலத்தில் விவசாயத்திற்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் 80 கோடி மக்களுக்கு மேல் ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் ஏழைகளின் வங்கி கணக்கில் ரூ.31,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது என உரையில் தெரிவித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc