தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோவை, அரியலூர், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி,தர்மபுரி, ஈரோடு போன்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 5இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.

மத்திய வங்கக் கடல்  பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் கேரள ,கர்நாடக கடற்கரைப் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.