நொய்டா, மும்பை, கொல்கத்தாவில் கொரோனா பரிசோதனை வசதிகளை காணொலியில் தொடங்கவுள்ளார் பிரதமர் மோடி.!

நொய்டா, மும்பை, கொல்கத்தாவில் புதிய கொரோனா பரிசோதனை வசதிகளை நாளை காணொலியில் தொடங்கி வைக்கவுள்ளார் பிரதமர் மோடி.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் பிரதமர் மோடி நாளை மூன்று உயர் செயல்திறன் கொரோனா சோதனை வசதிகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.

இந்நிலையில் நாளை நொய்டா, மும்பை, கொல்கத்தாவில் புதிய கொரோனா பரிசோதனை வசதிகளை நாளை காணொலியில் தொடங்கி வைக்கவுள்ளார் பிரதமர் மோடி இதன் மூலம் ஒரு நாளில் 10,000 க்கும் மேற்பட்ட மாதிரிகளை சோதிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை வசதிகள் ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சிகிச்சையை அதிகப்படுத்தவும் உதவுகின்றன. இதனால் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.