தப்பித்தவறி கூட இந்த உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு விடாதீர்கள்..!

காலை நேரங்களில் உட்கொள்ளும் காலை உணவு தான் உங்களின் அஆரோக்கியம், அன்றைய நாளின் உங்களது சுறுசுறுப்பு என அத்தனைக்கும் அடித்தளமாக இருக்கிறது.காலை நேரங்களில் சத்துமிக்க, சரிவிகித உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். இன்றைய நவீன கால அவசரத்தின் காரணமாக கிடைக்கும் உணவுகளை ஏனோ தானோ என உட்கொள்கிறோம்.

இந்த பதிப்பில் காலையில் சாப்பிடவே கூடாத 5 உணவுகள் என்னென்ன பற்றி பார்க்கலாம்.!

தேநீர்/காபி

காலை எழுந்ததும் தேநீர் அல்லது காபியை தேடி செல்லும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு; ஆனால், வெறும் வயிற்றில் தேநீர் அலல்து காபியை அருந்துவது மிகவும் தவறான செயல்.

காலையில் வெறும் வயிற்றில் காபி/தேநீர் பருகுவது செரிமானம், குடல் மற்றும் மலக்குடல் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த வல்லது; இப்பழக்கம் நெஞ்செரிச்சலையும் உண்டாக்கும். ஆகையால் காபி/தேநீர் போன்றவற்றை காலை உணவுக்கு பின் அல்லது உணவுடன் சேர்த்து பருகுதல் நல்லது.

வெள்ளை பிரட்

மைதாவால் செய்த வெள்ளை பிரட்டினை காலையில் வெறும் வயிற்றில் உண்பது உகந்த செயல் அல்ல; அதில் இருக்கும் மைதா போன்ற பொருட்கள் உடலுக்கு தீங்கினை விளைவிக்கக்கூடியவை.

அதுவும் வெறும் வயிற்றில் உண்ணும் பொழுது அதன் வீரியம் பல மடங்கு தீங்கினை உண்டாக்க வாய்ப்புண்டு; மேலும் இந்த பிரட்டில் ஜாம் போன்றவற்றை தடவி உண்பது உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க வழிவகுக்கும். ஆகையால் இந்த பிரட் உண்பதை தவிர்த்து, இதற்கு பதிலாக பிரௌன் பிராட்டினை உண்ணலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளான, பாட்டில் ஐட்டங்கள், ஊறுகாய், கருவாடு போன்ற உணவுகளை காலை வேளையில் வெறும் வயிற்றில் உண்ணுதல் கூடாது; இதற்கு மாற்றாக அச்சமயம் சமைத்த புதிய உணவுகளை உண்ணுங்கள்.

கெலாக்ஸ்

கெலாக்ஸ் போன்ற செயற்கை முறை உணவுகளை வெறும் வயிற்றில் உண்பது நல்லதல்ல; இது உடல் எடை குறைக்க, எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் என எண்ணி பலர் இதனை வெறும் வயிற்றில் உட்கொள்வது உண்டு; ஆனால் அது நன்மை பயக்காது.

பான் கேக் மற்றும் வேஃபில்ஸ்

பான் கேக் மற்றும் வேஃபில்ஸ் போன்ற மைதாவால் ஆன மேற்கத்திய உணவுகளை காலையில் வெற்று வயிற்றில் உண்ணுதல் பலவித தீங்குகளை உடலில் ஏற்படுத்தும்.

ஆகையால் இது போன்ற உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் உண்பதை தவிர்ப்பீராக நண்பர்களே! உங்கள் நலன் கருதி இந்த தகவலை பதிவிடுகிறோம்; பதிவு பலருக்கும் நலன் நல்க பதிவை பரப்புவீராக!

author avatar
Soundarya

Leave a Comment