மலம் கழிக்கச் சென்று- மரணம் அடைந்த இளைஞர்..அடித்தே கொன்ற பொதுமக்கள்! என்ன நடந்தது..?

மலம் கழிக்கச் சென்று- மரணம் அடைந்த இளைஞர்..அடித்தே கொன்ற பொதுமக்கள்! என்ன நடந்தது..?

மலம் கழிக்க சென்ற இளைஞர் ஒருவரை பொதுமக்கள் அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள காரை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் வயது(26). சக்திவேல் விழுப்புர மாவட்டத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வருகிறார். சம்வத்தன்று மதியம் வீட்டிலிருந்து பணிக்கு தன்னுடையது இருசக்கர வாகனத்தில் கிளம்பிய அவர் செ.புதூர் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதி அருகே மலம் கழிப்பதற்காக ஆடையை கழட்டி உள்ளார்.இந்நிலையில் அருகில் வயலில் வேலை செய்திருந்த பெண்மணி சக்திவேலை தவறாக நினைத்து கத்தி கூச்சலிட்டுள்ளார்.இதனால் அவருடைய கூச்சலைக்கேட்டு  அவருடைய உறவினர்களையும் அழைத்து உள்ளார். இதனால் பயந்து அங்கிருந்து தலைதெறிக்க சக்திவேல் ஓடியுள்ளார். ஓடிய அவரை விரட்டிச் சென்ற உறவினர்கள் மக்கள் மக்கள் அவரை பிடித்து கை மற்றும் கால்களை கட்டி வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர். தாக்குதலில் சக்திவேலுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு பதற்மான சூழல் நிலவிய நிலையில் அங்கு வந்த பெரியதச்சூர் காவல் உதவி ஆய்வாளர் வினோத்சக்திவேலை மீட்டார்.இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி எழுதி வாங்கிக்கொண்டு அவரை அனுப்பி உள்ளார்.காயமடைந்ததோடு வீட்டுக்குச் சென்ற சக்திவேல் சிறு நேரத்தில் உடனே மயங்கி விழுந்து  உயிரிழந்தார்.

Latest Posts

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் கொடுத்தவர் இலங்கை நபர்..?
#IPL2020: கொல்கத்தாவை வீழ்த்தி 2-ம் இடத்திற்கு சென்ற பெங்களூர்..!
#IPL2020: மிரட்டலாக பந்து வீசிய பெங்களூர்.. 84 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா.!
சிம்பு நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா.?
"பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்க யாரும் நேரில் வர வேண்டாம்" - கே.எஸ்.அழகிரி!
இந்தியாவில் காற்று மாசுபாட்டால் 1.16  லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு - அமெரிக்க ஆய்வு
கமல்நாத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!
பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி - மைசூரு சிறப்பு ரயில் இயக்கம்.!
ஆந்திராவில் 27 மாணவர்களுக்கு கொரோனா.. 4 பள்ளிகள் 10 நாட்களுக்கு மூடல்.!
மத்திய வங்கியில் கணக்கு துவங்குவதற்கான விண்ணப்பத்தை வேளாண் கூட்டுறவு வங்கியில் பெறலாம்.!